கர்நாடக சட்டசபை தேர்தலின் போது கொடுத்த இலவச மின்சாரம் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 200 யூனிட் வரையிலான நுகர்வோருக்கு இலவச மின்சார திட்டம் பொருந்தும். மேலும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.