பாஜக மாநிலத் தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததற்கு, மாநிலத் தலைவர் செல்வ கணபதிதான் காரணம் என கூறப்பட்டது.

மேலும் கட்சிப் பதிவிலிருந்து அவர் விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநிலச் செயலாளர் ரத்தினவேல் நேற்று கட்சி அலுவலகத்தின் முன்பு சட்டை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது பாஜக.