“மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு ஒரு நாள் கூட செல்லாத இளையராஜா”…. வருகை பதிவேட்டில் பூஜ்ஜியம்…..!!!

மத்திய மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இருக்கிறார்கள். இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், மாநிலங்களவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவேடு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி மாநில நியமன எம்பிக்களில் ஒருவரான பிடி உஷா 13 நாட்கள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளதோடு ஒரு விவாதத்திலும் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து நியமிக்கப்பட்ட இளையராஜா கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட கலந்து கொள்ளவில்லை. மேலும் இவருடைய வருகை பதிவேடு பூஜ்ஜியமாக இருக்கிறது.

Leave a Reply