‘மாநாடு’ படப்பிடிப்பு… சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்களும் கோமாளிகளும் காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த புகழுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அந்த வகையில் விஜய் சேதுபதி, சந்தானம், அருண் விஜய் ஆகியோரின் படங்களில் புகழ் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘மாநாடு’ படப்பிடிப்பில் நடிகர் சிம்புவுடன் புகழ் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.