மாநகரம் பட ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… பட்டைய கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம். இந்தப் படத்தில் ஸ்ரீ சந்தீப் கிருஷ்ணன், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் மும்பைகார் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தான்ய மாணிக்தலா, சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே, சச்சின் கடேகர், விக்ராந்த் மாசே, ஹிர்து ஹரூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தை ஷிபு தமின்ஸ் தயாரித்துள்ளார். சமீபத்தில் கோட் சூட், கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் விஜய்சேதுபதி ஸ்டைலாக நிற்கும் ஸ்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.