மாதம் 1.4 லட்சம் சம்பளம்… தூங்குவது மட்டுமே வேலை…!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்று தூங்கினால் லட்சக்கணக்கான சம்பளத்தை வாரி வழங்குகிறது.

வேலை செய்யும் போது பலர் தூங்கி வழிவது வழக்கம். ஆனால் தூங்குவதே வேலையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தியுங்கள். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டிலே லவ் லக்சரி என்ற நிறுவனம் பல்வேறு நட்சத்திர விடுதிகளுக்கு படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நட்சத்திர விடுதிகளில் படுக்கை மற்றும் தலையணை வசதி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு சோதனையை செய்கிறது. அந்த விடுதிகள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டில் மிகவும் பிரபலமானவை மற்றும் அதிசொகுசு கொண்டவை.

அது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்பதற்காக அந்த நிறுவனம் இந்த மாதிரி சோதனைகளை செய்து வருகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் அறை மற்றும் உணவு என அனைத்தும் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு இரவு தூங்குவதற்கு 20,000 வரை வழங்கப்படுகின்றது. அங்கு தூங்கிய பிறகு தூக்கு அனுபவம் எப்படி இருந்தது, அதனை மேலும் எப்படி மேம்படுத்தலாம் என்பதை வீடியோவாக பதிவிட்டு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் லட்சக்கணக்கான சம்பளம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *