பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 சென்டம் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதனையடுத்து மாணவி நந்தினி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். மாணவி நந்தினிக்கு பல பேரும் தங்களது வாழ்த்துக்களை கூறினர்.
அதோடு கவிஞர் வைரமுத்து, தான் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் மூலம் தெரிவித்திருந்தார். அதன்படி மாணவி நந்தினி வீட்டிற்கு நேரில் சென்ற அவர் தங்கப்பேனாவை அவருக்கு பரிசாக வழங்கினார். அதோடு மாணவிக்கு தன் வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து கூறினார்.