மாணவியை கற்பழித்த கும்பல்…. சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் கடற்கரை பகுதியில் ஒரு கும்பல் காதலனை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கமுதியை சேர்ந்த பத்மேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது பத்மேஸ்வரனின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை மத்திய சிறையில் இருக்கும் மருத்துவமனையில் பத்மேஸ்வரன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குற்றவாளியை போலீசார் நேற்று அழைத்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து பத்மேஸ்வனின் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கை பெற போலீசார் முயன்று கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை ஏமாற்றி விட்டு பத்மேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பேருந்து நிலையம், ரயில் நிலையம், சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பத்மேஸ்வரன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *