மாணவிக்கு பாலியல் வன்கொடுமை…. காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. மகளிர் நீதிமன்றம் அதிரடி…. !!!!

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு, 10 வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 26 வயதுடைய இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நிர்பய்குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்துதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் தெளிவாக இருப்பதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில், நிர்பய் குமார் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் 10 ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராதத் தொகையில் இருந்து 10,000 ரூபாயை இழப்பீடாக வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அதற்குரிய முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *