மாணவிக்கு நடந்த கொடுமை…. தொந்தரவு அளித்த வாலிபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிபதி 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ஓட்டுநரான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *