மாணவிகள் செயல்முறை விளக்கம்…. கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி…. மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

மதுரையில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிக்கு செயல்முறை விளக்கத்தை கூறியுள்ளார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இதனிடையே போடிநாயக்கன்பட்டியில் அழகுமுரளி என்பவர் தனது நிலத்தில் தென்னை மரங்களையும், மிளகாய் செடிகளையும் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கும் திட்டத்தின் கீழ் போடிநாயக்கன்பட்டியிலிருக்கும் அழகுமுரளியின் நிலத்திற்கு சென்று செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளனர்.

அதாவது தென்னை மற்றும் மிளகாய் செடிகளுக்கு, நீலம் மற்றும் மஞ்சள் நிறம் ஒட்டும் பொறியை அமைக்கும் வழியை மாணவிகள் விவசாயிக்கு எடுத்துரைத்தனர். மேலும் இதனுடைய பயன்கள் குறித்தும் விவசாயிக்கு கூறியுள்ளார்கள்.