ஆந்திரா மாநிலத்தில் மாணவிகளின் தலையில் கை வைத்த தலைமை ஆசிரியயை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகள் சிலர் தலைமுடியை விரித்துப் போட்டு வந்துள்ளார்கள். இதைப்பார்த்த தலைமை ஆசிரியயை மாணவர்களின் முடியை வெட்டிவிட்டார். இதனால், மாணவிகளின் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்  நடத்தினர். இது குறித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.