மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் பயத்தை போக்கும் வகையில் பிரதமர் ஆலோசனை வழங்குகிறார். இதனால் மாணவர்கள் தரப்பிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பிரதமர் நேரலையில் பதில் அளிக்கிறார்.

இங்கு பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் முகநூல்,இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் லிட்டர் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவருடைய அனுபவங்கள் மற்றும் அறிவுரைகளை கேட்க முடியும். அதே சமயம் innovateindia.mygov.inஎன்ற நமோ செயலி உள்ளிட்டவை மூலமாகவும் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சகம் 1921 என்ற சிறப்பு தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை குரல் பதிவு செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply