2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் அதற்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குனரகம் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.