மாணவர்களே!… 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது.

அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி நிறைவடைகிறது. அத்துடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது பிப்ரவரி 1ஆம் தேதி துவங்க இருக்கிறது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25ம் தேதிக்குள் வெளியிட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply