மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) 2023-ம் வருடத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த வாரம் (அ) அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது.
எனினும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி பற்றி சிபிஎஸ்இ எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடிவுகள் results.cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் அறிவிக்கப்படும்.