மஞ்சள் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுவும் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்கள் கனமழையால் மிகவும் சிரமப்பட்டனர். கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. அந்த மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய மூன்று ஒன்றியங்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்படி நடத்தப்படுமா என அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என கூறினார். வெல்லம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாத பட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளார். மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற ஒன்பதாம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெறும் எனக் கூறியுள்ளார். டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் வெள்ளம் பாதித்த பள்ளிகளில் இயல்புநிலை திரும்பவில்லை என்றால் மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரம் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.