மாணவர்களே…. படிப்பை தொடர லோன் வாங்க போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடர்வதற்காக வங்கிகளில் கல்விக் கடன் வாங்குகிறார்கள். அதில் 7 ஆண்டுகள் திருப்பி செலுத்த கூடிய 20 லட்ச ரூபாய் கல்விக் கடனுக்கு 7.15 % வட்டி வழங்கப்படுகிறது. கல்வி கடன் வழங்குவதற்கு கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பல வங்கிகளில் கல்விக் கடன்கள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில வங்கிகளில் வட்டி குறைவாக உள்ளது.

தற்போது கடன் வட்டி விகிதம் 6.75 முதல் 7.15% வரை உள்ளது. மேலும் கல்விக்கடன் குறைந்த வட்டியில் வழங்கும் வங்கியில் முதலிடத்தில் இருப்பது மாநில வங்கியான பாங்க் ஆப் பரோடா 6.75 வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. 2 வது இடத்தில் மற்றொரு பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி 6.8 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. 3 வது இடத்தில் நாட்டின் பெரிய வங்கியான பிஓபி. 4 வது இடத்தில் பாங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 6.8 5% வட்டி விகிதத்தில் கடன் வழங்கிவருகிறது. இந்த இரு வங்கிகளிலும் வட்டி விகிதமும் ஒரே அளவில் இருக்கிறது. மேலும் 5 வது இடத்தில் அரசு வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, மற்றும் ஐடிபிஐ இந்த மூன்றும் 6.9 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது. 6 வது இடத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா 7.5 சதவிகிதம் வட்டி சதவீதத்திலும் இறுதியாக இந்தியன் வங்கி 7.15% வட்டி வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *