சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து   மழை பெய்து வந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுர மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அளிக்கப்படும் என்று தேவைகள் வெளியானது. இந்நிலையில்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.