பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறும் பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.