மாணவர்களே இது உங்களுக்காக… கொஞ்சம் கவனிங்க… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாதம்தோறும் ரூ.1250 உதவித்தொகையும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளின் போது 2000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும். எஸ்சி எஸ்டி பிரிவினர் 30 மதிப்பெண்களுக்கும், மற்ற பிரிவினருக்கு 40 மதிப்பெண்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகும். ஆகவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் இதனை தவறவிட வேண்டாம்.