மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா… கல்லூரிகள் மூடப்படும் அபாயம்.. !!!

மதுரை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் மூன்று மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே பொருள் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து விடுதியில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக முதலாமாண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பயிற்சிப் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் தொடர்ந்து மாணவர்களிடையே கொரோனா பரப்பிக் கொண்டிருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.