
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கோமியம் குடித்தால் 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் மாட்டு கோமியத்தை முதலில் அவர் குடிக்கட்டும் என்று கூறப்பட்டது. அதற்கு விளக்கம் கொடுத்த அவர் நாங்கள் பஞ்சகவ்வியம் சாப்பிடுவோம். அதில் மாட்டு கோமியம் இருக்கிறது. அதில் காய்ச்சல் சரியாகும் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறினார்.
இது பற்றி பேசிய தமிழிசை சௌந்தரராஜன் மாட்டு கோமியத்தில் 80 வகையான காய்ச்சலை குணமாக்கும் மருந்து இருப்பதாக கூறினார். ஒரு ஆங்கில டாக்டராக நான் இருந்தாலும் மாட்டு கோமியத்தில் அமிர்தநீர் இருக்கிறது என்று தான் நம்புவதாக அவர் கூறிய நிலையில் மாட்டுக்கறியை மட்டும் நீங்க சாப்பிடுவீங்க ஆனால் மாட்டு கோமியத்தை மட்டும் குடிக்க மாட்டீங்களா என்று கேட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, மாட்டு கோமியத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே மாட்டு கோமியத்தில் நல்லது இருக்கிறது அதை குடிக்கலாம் என்று சொல்பவர்கள் அவர்களே அதனை குடித்துக் கொள்ளட்டும். மேலும் கோமியத்தை குடிப்பவர்கள் குடித்துக் கொள்ளட்டும் ஆனால் அதற்காக எங்களை குடிக்குமாறு அவர்கள் சொல்ல வேண்டாம் என்று கூறினார்.