மாட்டுக்கு இத எடுக்க போயிருக்காங்க…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பாம்பு கடித்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சந்தனமாரி. இந்நிலையில் இவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் சந்தனமாரி வைக்கோல் படப்பிற்கு சென்று மாட்டிற்கு வைக்கோல் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு சந்தனமாரியை பாம்பு கடித்தது. இதனால் பதறிய சந்தனமாரி வலியால் துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *