மாடல் துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு..! முகவர் செய்த மோசமான செயல்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை..!!

சூரிச் பகுதியில் இளம் ஆண் மாடல்கள் பலரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாடல் முகவர் ஒருவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சூரிச் பகுதியில் பிரபலமான மாடல் முகவர் ஒருவர் மீது கடந்த வருடம் ஜூன் மாதம் இளம் ஆண் மாடல்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த மாடல் முகவருடைய செல்போனை சோதித்ததில் அவர் மாடல் துறையில் வாய்ப்பளிப்பதாக கூறி பல இளைஞர்களிடம் நிர்வாண புகைப்படங்களை கோரியிருந்தது தெரிய வந்ததாக பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். அதோடு மட்டுமில்லாமல் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீதான புகார்கள் அனைத்தும் போலியானவை என்று சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அந்த மாடல் முகவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மாடல் நிறுவன முகவர் இளைஞர்கள் பலரையும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஈர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர்களை ஸ்டூடியோவிற்கு வரவழைத்து அவர்களுக்கு மது அருந்த கொடுத்ததோடு அவர்களை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களையும் எடுத்து வந்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அந்த இளைஞர்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். ஆனால் அந்த மாடல் முகவர் தமது குற்றங்களை ஏற்க மறுத்ததோடு அனைத்தும் தனக்கு எதிராக போலியாக ஜோடிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் 34 வயதான அந்த மாடல் முகவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *