“மஹாளய அம்மாவாசை” அப்படி என்ன சிறப்பு…. இவர்களுக்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்கணுமா….?

மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்து கொள்வது ஒருவகையில் சிறப்புத்தான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால் தீர்க்காயுள், செல்வம், புகழ், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளயம் என்றால் கூட்டாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாகவும் ஒருசேர காலமே மஹாளயபட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால் 15 நாட்கள் என்று பொருள். அதாவது நம் முன்னோர்கள் 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாலய பட்சம் என்று கூறுகிறது. மஹாலய பட்சம் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

சாதாரண அம்மாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்க்கு தர்ப்பனம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளய பட்ச அம்மாவாசை தினத்தில் தாய் வழி மற்றும் தந்தை வழி முன்னோர்க்கு மட்டுமின்றி நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள்  அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாலய அமாவாசையின் தனிப்பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாலய பட்சம் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்.

இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும் நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். மஹாளய பட்சத்தில் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேருகின்றன. இவ்வாறான சிறப்புகளால் தான் தை அமாவாசை, ஆடி அமாவாசையை காட்டிலும் மஹாளய அம்மாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *