தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதே போன்று கால்நடைகள் மற்றும் குடிசை வீடுகள் போன்றவைகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அந்த மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக 2 மாதங்களுக்கு மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கும் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.