JUSTIN: மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி…. நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்து நிலைமை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளதாகவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *