கொஞ்ச வெயிலா அடிக்கு…. அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்… மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு..!!

ஆசனூர் வனப்பகுதியில் வெப்பத்தின் காரணமாக தீடிரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ போதுமான தண்ணீர் இல்லாமல் மிகுந்த வரட்சியில் காணப்படுவதுடன், வன விலங்குகள் உணவுகளை தேடி ஊருக்குள் நுழைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரேபாளையம் பிரிவிலிருக்கும் வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் தீ பற்றி மளமளவென  எரிய தொடங்கியுள்ளது.

இதனையடுத்து அந்த வழியாக சென்ற மக்கள் தீ பற்றியதை பார்த்து அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவிலுள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகியது என தீயணைப்பு வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.