“மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ஜோதிகா”…. யார் தெரியுமா…???

நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். மலையாளத் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடிப்பில் உருவாக இருக்கும் மலையாள திரைப்படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. குடும்ப பின்னணி திரைப்படமாக உருவாகும் அந்த படத்தை ஜியோ பேபி இயக்க உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.