மலைப்பாம்புகளை உணவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவிலுள்ள உணவகங்களில் மலைப்பாம்புகளை உணவாக்கும் முயற்சியில் ஃப்ளோரிடா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஏனென்றால் மற்ற உயிர்களை விட மலைப்பாம்புகள் அதிக அளவில் உண்ணுவதால் இயற்கை சமநிலை பெரிதாக பாதிக்கப்படுகிறது. எனவே தான் இந்நிலையை சமப்படுத்த மலைப்பாம்புகளை உணவாக அறிமுகம் செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள்.
மேலும் மலைப்பாம்புகளின் இறைச்சிகளில் பாதரசம் உள்ளது. இந்த பாதரசம் எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. எனவே மனிதர்கள் அதை சாப்பிடும் போது உடல் நலத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமா என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சிக்காக சுமார் 6000 மலைப்பாம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மலைப் பாம்பு இறைச்சி ஏற்கனவே சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இதனை மக்கள் ஒரு பவுண்ட் இறைச்சி 50 டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கும் தயாராக உள்ளனர்.