4ஜி பயனாளர்களுக்காக மிகக் குறைந்த விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிரீபெய்டு திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. சாதாரண 4ஜி போன்கள், ஜியோ பாரத் போன்கள் என இரண்டு வகையான திட்டங்களை ஜியோ அளித்து வருகிறது. இதில் ஜியோ பாரத் போன் பயனாளர்களுக்கு 234 ரூபாய் விலையில் 56 நாள் வேலிடிட்டியுடன் 28 ஜிபி டேட்டா , வரம் பெற்ற அழைப்புகள் மற்றும் மாதத்திற்கு 300 எஸ்எம்எஸ் கொண்ட திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது.