மறைந்த நடிகர்: குழந்தைகளுக்காக வாக்குறுதி கொடுத்த விஷ்ணு விஷால்… பெரிய மனசு சார்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்,  மறைந்த வெண்ணிலா கபடிக்குழு நடிகர் வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெண்ணிலா கபடி குழு நடிகர் வைரவன் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவை நான் ஏற்பதாக அவரின் மனைவியிடம் வாக்குறுதி அளித்துள்ளேன். அவருடைய குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார்.