தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்த கே. விஸ்வநாத் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் இவரின் மரணம் திரை உலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அவரின் மனைவி ஜெயலட்சுமி நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 86. மாரடைப்பால் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கணவர் உயிரிழந்து ஒரு மாதத்திலேயே மனைவியை உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கே. விஸ்வநாத் தமிழில் யாரடி நீ மோகினி மற்றும் ராஜபாட்டை ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது m