மறுப்பு தெரிவித்த இளம்பெண்…. கணவரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு ரவி தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சாவித்திரி பணம் கொடுக்காததால் கோபமடைந்த ரவி கடந்த 2020-ஆம் ஆண்டு தனது மனைவியை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சாவித்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் 11-ஆம் வகுப்பு படிக்கும் ரவியின் மகன், 8-ஆம் வகுப்பு படிக்கும் ரவியின் மகள் ஆகியோருக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *