மறுபடியும் அதே தப்ப பண்ணுனா…. “இந்தியாவை வீழ்த்துவோம்”…. பாக். முன்னாள் வீரர் உறுதி…!!

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா இப்படி செய்தால் பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லத்தீப் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் மற்ற நாட்டு அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியால் நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் போனது. ஆனால் இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி கோப்பையை வெல்லும் முனைப்பில் தயாராக இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்த அடுத்த டி20 போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றது இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதற்குப் பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களம் இறங்கி விளையாடுகிறது இந்தியா..

அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் பங்கேற்று விளையாட இருக்கிறது இந்திய அணி. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முதன்மை விளையாட்டு வீரர்கள் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக 20 ஓவராக போட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான முழு அட்டவணையும் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் மோதுகின்றன.

கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் துபாய் மைதானத்தில் மோதிய போது பாகிஸ்தான் முதல் முறையாக இந்திய அணியை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்திய அணிக்கு தலைகுனிவாக போனது. அதனால் இந்த முறை கண்டிப்பாக அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தொடரில் பாகிஸ்தானை வென்று பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஏழு முறை ஆசியக் கோப்பையை வென்று வெற்றிகரமான ஆசிய  அணியாக திகழ்ந்துவரும் இந்தியா அணி கடைசியாக 2018ல் இதே துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் வங்கதேச அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. எனவே இந்த முறையும் பாகிஸ்தான் உட்பட மற்ற அணிகளை வென்று கோப்பையை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் இந்திய அணி செய்த தவறினால் பாகிஸ்தான அணி இந்தியாவை வென்றது. எனவே அதேபோல இந்த முறையும் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், அணியில் தேவையற்ற வீரர்கள் மாற்றம் செய்வது போன்ற குளறுபடிகள் ஏதேனும் நிகழ்ந்தால் பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று அந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லத்தீப் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய youtube சேனல் பக்கத்தில் அவர் பேசியதாவது, வெற்றி தோல்வி என்பது வேறு வேறு விஷயம் தான். ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பானதாக இருக்கிறது. டெஸ்ட் போட்டி ஒருநாள் அல்லது டி20 என எந்த விதமான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் அதே சமயம் இந்தியாவில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்த ஆண்டும் 7 மாதங்களில் 7 கேட்டன்கள் என்ற நிலைமை ஒரு சீறற்ற சூழ்நிலையையே காட்டுகின்றது. இந்திய அணியில் விராட் கோலி இல்லை, ரோகித் சர்மா கே.எல் ராகுல் காயம் அடைகின்றனர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் கேப்டனாக செயல்படுகின்றனர். அதேபோல ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது அவர்கள் சிறந்த அணியை கட்டமைப்பதற்கு தடுமாறுகிறார்கள். இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள்.. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.. ஆனால் அதை வைத்து அவர்களால் உறுதியாக சிறந்த 16 பேர் கொண்ட அணியை உருவாக்க முடியாமல் இருக்கிறார்கள்..

இதன் காரணமாக அவர்களுக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியை உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும். கடந்தாண்டு இதுபோன்ற தவறுகள் செய்ததாலேயே பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்று விட்டது. ஆகவே இந்த முறையும் அதே தவறை மீண்டும் செய்தால் இந்தியாவின் குறையை பயன்படுத்தி பாகிஸ்தான் அணி மீண்டும் வெல்லும் என்றே நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..

முதல் தரமான வீரர்கள் இல்லாமலேயே கடந்த சில தொடர்களில் இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடி வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *