அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஏவுதளம் மீது பறக்கும் போது பலூனை சுட்டு வீழ்த்தினால் அது கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனை அடுத்து அந்த மர்ம பலூன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மர்ம பலூனின் இயக்கம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் அமெரிக்காவுடன் இணைந்து கனடா நாடும் செயல்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் கனடா நாட்டு வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தன்னுடைய சீன பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சீன அதிகாரிகளுடன் சந்திக்க இருக்கும் நேரத்தில் இந்த பலூன் விவகாரம் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தும். இதனை ஆண்டனி லிங்கன் விரும்பவில்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனாலேயே ஆன்டனி பிளிங்கன் அவர்களின் சீனப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.