மர்மமாக இறந்த விவசாயி…. மனைவி உட்பட 3 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மீனாட்சி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு வீட்டிற்கு அருகில் கருப்பசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பசாமியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கருப்பசாமி தனது விவசாய நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்துள்ளார். அதன் பிறகு அடிக்கடி கருப்பசாமி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மீனாட்சி தனது அண்ணனான ராஜேந்திரன் மற்றும் தங்கை மகனான சக்தி சிவன் போன்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தட்டிக் கேட்க வந்த போது ஏற்பட்ட தகராறில் மீனாட்சி, ராஜேந்திரன், சக்தி சிவன் போன்றோர் கருப்பசாமியை சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் மீனாட்சி உட்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *