மர்மமாக இறந்து கிடந்த மாணவி… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

10-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரித்து கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபா கணக்கு தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு தூங்க சென்ற சிறுமியை மறுநாள் காலை அவரது பாட்டி எழுப்புவதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபா வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ஸ்ரீபாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இரண்டு முறை ஸ்ரீபாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. எனவே வலிப்பு வந்து ஸ்ரீபா உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *