மருமகள் செய்த முள்ளங்கி சாம்பார்.. ஆசை ஆசையாக சாப்பிட்ட மாமனார் மாமியார்.. அடுத்த நொடியே துடிதுடித்து..!!

திருமணத்திற்கு மீறிய உறவு தெரிந்தால் விஷம் வைத்து மாமனார்,  மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹரி என்பவருடன் கீதா திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கீதாவின் மாமனார், மாமியாரும் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கீதா மாமனார், மாமியாருக்கு எலி மருந்து கலந்த முள்ளங்கி சாம்பாரை உணவாக அளித்துள்ளார். இதில் அவரது மாமனார், மாமியார் மட்டும் இன்றி பக்கத்து வீட்டு பத்து வயது சிறுவனும் சாப்பிட்டதில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கீதாவையும் அவரது காதலரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply