மருமகளை திட்டிய மாமியார்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கு ஆலிஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ராணி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செல்வகுமாரின் தாயாரான செல்வராணி என்பவர் தனது மருமகளை அடிக்கடி திட்டியுள்ளார். இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஆலிஸ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *