மருமகளுடன் ஏற்பட்ட தகராறு…. அரிவாளால் வெட்டிய மாமனார்…. போலீஸ் விசாரணை…!!

மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் செல்லதுரை(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(33) என்ற மனைவி உள்ளார். இவருக்கும் மாமனாரான மாணிக்கம்(60) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாணிக்கம் ராதிகாவின் வலது காலை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ராதிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *