மருத்துவமனையில் நர்ஸ் குத்தி கொலை….. கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் நான்சி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருத்துவப் பிரதிநிதியான வினோத்(37) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நான்சி வினோத்தை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனை அடுத்து வினோத்துக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் தினமும் அவர் வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்துள்ளார். நேற்று நான்சி பணியில் இருந்த போது வினோத் அங்கு சென்று தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது எதற்காக வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து தகராறு செய்கிறீர்கள் என நான்சி கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த வினோத் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நான்சியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நான்சி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த வினோத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.