மருத்துவமனைக்கு புறப்பட்ட முதியவர்… மகனுடன் பயணம்… வழியில் நேர்ந்த சோகம்..!!

கண்சிகிச்சைக்காக மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சித்தூர் மாவட்டம் எல்லம் பள்ளியை சேர்ந்த பெத்த.வெங்கட்ரமணா( வயது 60) நேற்று கண் குறைபாட்டால் சிகிச்சை பெறுவதற்காக தனது மகனான முன்ஜித்குமாருடன் மதனப்பள்ளியை அடுத்த சின்னதிப்பசமுத்திரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் அவர்களுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதனால் முதியவரான பெத்த.வெங்கட்ரமணா மகன் முன்ஜித்குமார் , மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மதனப்பள்ளி தேவதாநகர் பகுதியைச் சேர்ந்த நவீன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

அதன்பின் அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதில் முதியவரான பெத்த.வெங்கட்ரமணாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மதனப்பள்ளி டவுண் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *