மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பு மாணவர்களின் விவரங்கள் அனைத்தையும் இளைய தளம் மூலமாக பதிவேற்ற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மை உடன் நடத்த வேண்டும்.

நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அவ்வகையில் இந்த வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், படிப்பு விவரம், இட ஒதுக்கீடு விவரம், ஊக்கத்தொகை அளிக்கப்பட்ட விவரம் என அனைத்தையும் ஆணையத்தின் இணைய பக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான தெரிவு பகுதியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.