மரத்தில் ஏறிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிளிகளை பிடிக்க முயன்ற குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் முகமது காசிம் மற்றும் ஷேக் அப்துல் காதர் ஆகிய 2 பேரும் இணைந்து பம்பை ஆற்று சாலையில் பச்சை கிளிகளை பிடிப்பதற்காக மரங்களில் ஏறியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு வாலிபர்கள் இடமிருந்தும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *