மரத்தின் மீது மோதிய தனியார் பேருந்து…. காயமடைந்த 11 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

மரத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

தேனி மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நோட்டம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலக்கோட்டையை சேர்ந்த சுப்பையா, விஜயா, ஆண்டிபட்டியை சேர்ந்த காவேரி, ஹரிகிருஷ்ணன், ராசு, காயத்ரி, தேனியை சேர்ந்த கோபால், பஞ்சவர்ணம் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 11 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.