தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 3-வது முறையாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஜனவரி 11-ஆம் தேதி துணிவு படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏகே62 திரைப்படத்தின் சூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்க இருக்கிறது.