பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) தமிழ் சினிமாவில் நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இவர் உடல் நல குறைவால் கடந்த 19 ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் இறப்புக்கு காரணம் முறையற்ற உணவுமுறைதான் என்று தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசிய மயில்சாமியின் மகன் அன்பு, “அப்பா எப்போதுமே உணவு விஷயத்தில் கவனமாக இருப்பார். இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு கூட ஒரே ஒரு இட்லியும் சட்னியும்தான் சாப்பிட்டார். பின்னர் லேசாக நெஞ்சு வலிக்கிறது என்றார். மருத்துவமனை அழைத்து செல்வதற்குள் சாய்ந்துவிட்டார்” என்றார்.