மயான கொள்ளை விழா….. 25க்கும் மேற்ப்பட்ட ஆடுகள், கோழிகள் பலி…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை பூஜையில் 25க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது முத்துகாளிப்பட்டி மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக 25க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை கொண்டு வந்தனர். இதனை விரதமிருந்து வந்த ஆடு கடிக்கும் பூசாரிகள் ஆக்ரோஷத்துடன் கடித்து ஆடுகளை பலி கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.